இனமத பேதமற்ற வகையில் எனது அரசியல் பயணம் தொடரும் - பிரதியமைச்சர் காதர் மஸ்தான்

-ஊடகப்பிரிவு

யுத்தத்தால் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வு சிறக்க இனமத பேதங்களுக்கு அப்பால் நின்று அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற,வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய கலாச்சார பிரதியமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் தெரிவித்தார். 

இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த வைபவத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பிரதியமைச்சராக பதவிப்பிரமானம் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபொழுதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது. 

எனக்கு இப்பதவியை தந்த இறைவனுக்கு எனது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

எமது மக்கள் யுத்தத்தின் கோரவடுக்களிலிருந்து இன்னும் மீள முடியாமலிருப்பதை நான் அறிவேன். அவர்களின் வாழ்வு சிறக்க அம்மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப எனது இந்த பிரதியமைச்சுப் பதவியின் அத்தனை அதிகாரங்களை பாவிப்பேன் என்பதை குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன். 

மேலும் என்னை நம்பி வாக்களித்த எனது மக்களுக்கு  நன்றிகளை சமர்ப்பிக்கும் இவ்வேளையில் அந்த  மக்களினதும்  எனது  மாவட்ட மக்களினதும்  பல்வேறுபட்ட தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு என்பதை உளமார தெரவித்துக் கொள்கிறேன்.

இந்த சந்தர்ப்பத்தில் என்னை நம்பி இப்பதவியை ஒப்படைத்திருக்கும் எமது ஜனாதிபதிக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டார். 

இனமத பேதமற்ற வகையில் எனது அரசியல் பயணம் தொடரும் - பிரதியமைச்சர் காதர் மஸ்தான் இனமத பேதமற்ற வகையில் எனது அரசியல் பயணம் தொடரும் - பிரதியமைச்சர் காதர் மஸ்தான் Reviewed by Vanni Express News on 6/12/2018 03:30:00 PM Rating: 5