இந்து மத அலுவல்கள் பிரதியமைச்சை துறந்தார் பிரதியமைச்சர் காதர் மஸ்தான்

-ஊடகப்பிரிவு

தனக்கு கீழ் வருகின்ற அமைச்சு துறைகளில் இந்து மத அலுவல்கள் துறையை உடனடியாக நீக்குவதற்காக  பிரதியமைச்சர் காதர் மஸ்தான் சுயவிருப்பத்தின் பேரில் இராஜினாமாச் செய்தார்.

இது தொடர்பில் அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

நேற்று முன்தினம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான்அவர்களை ஜனாதிபதி தன் சுய விருப்பத்தின் அடிப்படையில் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமித்திருந்தார்.. 

இந் நியமனத்தில் வழங்கப்பட்டிருந்த இந்து மத அலுவல்கள் அமைச்சு தொடர்பில் சிலர் அதனை இந்து ஒருவருக்கு வழங்கியிருக்கலாம் என ஊடகங்களில் அங்கலாய்த்திருந்த நிலையில் இன்று கெளரவ பிரதியமைச்சர் காதர் மஸ்தான் ஜனாதிபதியை சந்தித்து  குறித்த இந்து சமய அலுவல்கள் நொடர்பான விடயங்களை தனது அமைச்சு பொறுப்பிலிருந்து நீக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அவருக்கு புனர்வாழ்வளிப்பு  மீள்குடியேற்ற மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சுப் பதவிக்கான நியமனக் கடிதத்தை மீள வழங்கி பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

அத்துடன்  தனது அரசியலில் இந்துப் பெருமக்கள் மீது தேர்தலுக்கு முன்னர் இருந்த மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து இருக்கமென்றும் தான் பாரமெடுத்துள்ள அமைச்சு பதவிகள் மூலம் அந்த மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு தான் என்றும்போல் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். 
இந்து மத அலுவல்கள் பிரதியமைச்சை துறந்தார் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் இந்து மத அலுவல்கள் பிரதியமைச்சை துறந்தார் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் Reviewed by Vanni Express News on 6/14/2018 11:35:00 PM Rating: 5