haiiii

இனமத பேதங்களின் எல்லைகளுக்கப்பால் நின்று பணியாற்றுவேன் - பிரதி அமைச்சர் மஸ்தான்

-இமாம் றிஜா

என்னை மிகுந்த நம்பிக்கையோடு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்து பிரதி அமைச்சராக உயர்ச்சி பெறுவதற்கு காரணமாக இருந்த எனது மக்களுக்கு  எனது மனமார்ந்த நன்றிகளை  தெரிவிப்பதுடன் அம்மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு என்னால் இயன்றவரை செயற்படுவேன் என்பதை நன்றியுணர்வோடு கூறிவைக்க விரும்புகிறேன்.

நானோ எனது குடும்பமோ என்றுமே இனமத பேதங்களை ஆதரித்தவர்கள் அல்ல. அல்லாஹ்வுக்காக என மக்களோடு அன்னியமொன்னியமாக வாழ்ந்து வருபவர்கள்.

இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சில் தனது அமைச்சுப்பணிகளை பொறுப்பேற்ற பின் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர்களான பெளஸி,சுவாமிநாதன்,துமிந்த திஸாநாயக்க,நிமல் ஸ்ரீபால டி சில்வா,மஹிந்த அமரவீர,பைஷர் முஸ்தபா உள்ளிட்ட அமைச்சர்களோடு பாராளுமன்ற உறுப்பிர்களான இம்ரான் மஹ்ரூப், மற்றும் அங்கஜன் உடன்  அமைச்சின் செயலாளர்,சிரேஷ்ட அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்த மேற்படி நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது.

என்னை நம்பி இப்பதவியை ஒப்படைத்திருக்கும் ஜனாதிபதிக்கும் எனது நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதுடன் எனது தாய் நாட்டின் இறைமையைக் பேணிக் காப்பதுடன் சிரேஷ்ட அநுபவசாலியான அமைச்சர் சுவாமிநாதனுடன் இணைந்து பணியாற்றுவதை ஒரு வரப்பிரசாதமாக கருதுகிறேன்.

பிரதமரின் வழிகாட்டலில் எனது அமைச்சுப் பணிகள் தொடரும் அதேவேளை இனமத பேதங்களுக்கு அப்பால் நின்று மகத்தான மக்கள் பணி செய்ய நான் திடசங்கற்பம் பூணுவதோடு இங்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மேலான நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சரின் ஆதரவாளர்களும் பெருந்தொகையாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: இனமத பேதங்களின் எல்லைகளுக்கப்பால் நின்று பணியாற்றுவேன் - பிரதி அமைச்சர் மஸ்தான்
இனமத பேதங்களின் எல்லைகளுக்கப்பால் நின்று பணியாற்றுவேன் - பிரதி அமைச்சர் மஸ்தான்
https://2.bp.blogspot.com/-ZXsr9HmqBRg/WyzZcE0EVpI/AAAAAAABMCw/xRiHJHsiYLk7UYzoXqg40IkC8lbwBg-FgCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://2.bp.blogspot.com/-ZXsr9HmqBRg/WyzZcE0EVpI/AAAAAAABMCw/xRiHJHsiYLk7UYzoXqg40IkC8lbwBg-FgCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2018/06/km_22.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2018/06/km_22.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy