அரசியல்வாதிகளுக்கு அஞ்சாத அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம்

-ஊடகப் பிரிவு

நல்லதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல்,அரசியல் பேதங்களுக்கு அப்பால் நின்று அதிகாரிகள் செயற்படவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்த எதிர்பார்ப்புக்களை யாரும் அலட்சியமாக கருதி விட முடியாது.

இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சருமான கெளவர காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கெளரவ காதர் மஸ்தான் அவர்களுக்கு இன்று மன்னார் வாழ் மக்களால் அளிக்கப்பட்ட வரவேற்பை தொடர்ந்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இக்கருத்துக்களைக் தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது.

மக்கள் பிரதிநிதிகளின் அரசியல் நடவடிக்கைகளால் ஒரு குறிப்பிட்ட சாரார் மாத்திரம் அபிவிருத்தி காண்பதை யாரும் அங்கீகரிக்க முடியாது அது அபத்தமானதும் மிகப் பிழையானதொரு உதாரணமுமாகும்.

இன,மத ,அரசியல் வேறுபாடின்றி அனைத்து மக்களையும் அபிவிருத்தி சென்றடைய வேண்டும்.

இன்று இந்த மன்னார் நகரின் நிலையை சற்று நோக்குகின்ற பொழுது மன்னார் நகர பஸ்தரிப்பு நிலையத்திற்கு கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் இன்னும் வேலைகள் முடியாத பரிதாபமான நிலையில் இருக்கின்ற துயரத்தைக் காண்கிறோம்.

இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும்.

எனக்கு அமைச்சராக ஒரு நல்ல மனிதர் சுவாமிநாதன் அவர்களும் திறமைசாலியான அமைச்சு செயலாளரும் வாய்த்திருக்கிறார்கள்.

என் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகக் கூடாது.

அதற்கு உங்களது மேலான ஒற்றுமையும் ஒத்துழைப்பும் எனக்குத் தேவை அதன் மூலமே நாங்கள் எதிர்பார்த்திருக்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்த இக் கூட்டத்தினைத் தொடர்ந்து நானாட்டான்,

மாந்தைமேற்கு,தோட்டவெளி ஆகிய இடங்களிலும் வரவேற்புக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதிகளுக்கு அஞ்சாத அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம் அரசியல்வாதிகளுக்கு அஞ்சாத அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம் Reviewed by Vanni Express News on 6/30/2018 10:23:00 PM Rating: 5