சிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை

கிளிநொச்சியில் கிராமம் ஒன்றிற்குள் புகுந்த சிறுத்தையை அடித்துக் கொலை செய்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை நடத்துவதாக சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். 

இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 

சிறுத்தையை அடித்துக் கொலை செய்தமை சம்பந்தமாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்று புத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரராவும் கருத்து வௌியிட்டார். 

அதேநேரம் சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக உரிய தண்டனை வழங்குவதாக வனஜிவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கூறியுள்ளார்.
சிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை சிறுத்தையை கொலை செய்தமை தொடர்பாக விசாரணை Reviewed by Vanni Express News on 6/22/2018 02:47:00 PM Rating: 5