சிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு


சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு​டையவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

குறித்த உத்தரவினை நேற்று (21) பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்றுமுன்தினம் அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களிற்குள் நுழைந்த சிறுத்தை, பிரதேசவாசிகளை தாக்க முற்பட்ட போது அங்கிருந்த இளைஞர்களால் தற்காப்புக்காக குறித்த சிறுத்தையை அடித்து கொலை செய்த சம்பவம் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. 

இதேவேளை குறித்த சிறுத்தையின் மரணத்தின் பின்னர் சிறுத்தையை கொலை செய்வதுபோல் சமூக வலைத்தளங்கள் மூலம் புகைப்படங்கள் வைரலாக பரவியது. 

இந்நிலையில் குறித்த புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு  நேற்றுமுன்தினம் நீதிமன்றில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இறுவெட்டு (சிடி) மூலம் சாட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக்கொண்டு அனைவரையும் கைது செய்யுமாறும்  நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு சிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு Reviewed by Vanni Express News on 6/23/2018 02:54:00 PM Rating: 5