ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் - மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பதவிகளை மாற்றினாலும் கட்சியை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

கலைஞர் மதுமாதவ அரவிந்தவின் புத்தகமான "மம எத்தக்" (நான் உண்மை) என்ற நூல் வௌியீட்டு விழா நேற்று (10) நடைபெற்றது. 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி இக்கருத்தினை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என குறிப்பிட்டார். 

மேலும், ஜனாதிபதி பிரதமரை குற்றம் சாட்டுகிறார், பிரதமர் ஜனாதிபதியை குற்றம் சாட்டுகிறார். அவன் கள்ளன், இவன் கள்ளன் என்று சொல்கிறார்கள். இறுதியில் பார்த்தால் 118 பேருமே கள்ளர்கள். இது நாட்டு மக்களுக்கு ஒரு தலையிடி. 

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்வதே இப்போது சந்தேகத்திற்கிடமாக உள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் - மஹிந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் - மஹிந்த Reviewed by Vanni Express News on 6/11/2018 06:03:00 PM Rating: 5