எந்த முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்

எந்த முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் நாங்களே வெற்றி பெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

மாவத்தகம பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய ஊழல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன. தற்போது வெளிநாட்டு  பத்திரிகை வெளியிட்ட  செய்தியொன்றை தூக்கிப்பிடித்து  எம் மீது  குற்றம் சுமத்துகிறார்கள்.

முன்னர் 18 பில்லியன் எனக்கு கிடைத்தாக கூறியனார்கள்.அந்த பணத்தை எவராவது தேடிப்பிடித்து கொண்டுவந்தால் நான் எனது கழுத்தை அறுத்துக்கொள்வேன் என்பதை நான் இன்றும் கூறுகிறேன்.அது எனக்கு பெரிய விடயமல்ல.

சந்தைக்கு,கடைத்தொருவிற்கு சென்றால் இந்த  ஆட்சியாளர்களின் தாய் தந்தையினரையும் சேர்த்து மக்கள் நினைவுபடுத்துகின்றனர்.கடந்த தேர்தலில் நல்ல ஒரு பாடத்தை மக்கள் இந்த அரசுக்கு படித்துக்கொடுத்தார்கள்.

அடுத்து மாகாண சபை தேர்தல் வருகிறது.அதனை உரிய காலத்தில் நடத்துவார்களோ தெரியாது.ஆனால் நாம் கூறுகிறோம்,எந்த முறையில் தேர்தலை நடத்தினாலும் நாம் வெற்றிபெறுவோம் என அவர் குறிப்பிட்டார்.
எந்த முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் எந்த முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் Reviewed by Vanni Express News on 6/30/2018 09:57:00 PM Rating: 5