SLFP, UNP, ஆட்சியமைப்பதானது பசு மாட்டையும் எருமை மாட்டையும் இழுத்துச் செல்வது போன்றது

அன்று தான் கூறிய விடயம் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ. பண்டாரநாயக்கவின் ஞாபகர்த்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சியமைப்பதானது, பசு மாட்டையும் எருமை மாட்டையும் ஒன்றாக இழுத்துச் செல்வது போன்றது என்றும், இதில் எவ்வித பொருத்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

மேலும் கருத்து கூறிய மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் தான் உள்ளிட்டவர்களுக்கு திருடன் திருடன் என்று குற்றம் சுமத்தியபோதிலும், தற்போது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு திருடன் திருடன் என்று கூறும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
SLFP, UNP, ஆட்சியமைப்பதானது பசு மாட்டையும் எருமை மாட்டையும் இழுத்துச் செல்வது போன்றது SLFP, UNP, ஆட்சியமைப்பதானது பசு மாட்டையும் எருமை மாட்டையும் இழுத்துச் செல்வது போன்றது Reviewed by Vanni Express News on 6/09/2018 05:20:00 PM Rating: 5