ஜனாதிபதி தலைமையில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான கூட்டம் ஒன்று இன்று (05) காலை இடம்பெற்றுள்ளது. 

அந்தக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்க் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இந்தக் கலந்துரையாடலில் அண்மையில் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து வௌியேறிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர். 

இதன்போது கட்சியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இதேவேளை அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் Reviewed by Vanni Express News on 6/05/2018 05:05:00 PM Rating: 5