வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி

எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா மற்றும் வடகொரியா சமீபத்திய சிங்கப்பூர் சந்திப்புக்கு பிறகு நண்பர்களாக மாறியுள்ளது. 

ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 12ம் திகதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு உலக தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். 

இந்நிலையில், வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

கிம்முடனான சந்திப்புக்கு பிறகு அமெரிக்காவின் வாஷிங்டன்னில் செனட் சபை நேற்று (21) கூடியது. அதில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது பேசிய டிரம்ப், வடகொரியா ஜனாதிபதி கிம்முடனான சந்திப்பு மிக பெரிய வெற்றியாக அமைந்து விட்டது. அந்த சந்திப்பு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது. 

இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு நிலவி வருகிறது. வடகொரியா அறிவித்தபடி ஏற்கனவே இயங்கி வந்த அணு ஆயுத சோதனை மையங்களை அழித்துள்ளது. அணு ஆயுத ஏவுகணை சோதனைகளையும் நிறுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி வடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி Reviewed by Vanni Express News on 6/22/2018 04:56:00 PM Rating: 5