என்னை சிறையில் அடையுங்கள் - நாமல் ராஜபக்ஷ

அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து நான் 100 ரூபாயை பெற்றிருந்தால், நல்லாட்சிக்கு அமைய நான் சந்தேகநபர் எனவும் அர்ஜூன் அலோசியஸ் அரசாங்கத்தின் சாட்சியாளராக இருந்திருப்பார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விதாரன்தெனிய பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாங்கள் திருடர்கள் என்று எங்களை விரல் நீட்டி காட்டியவர்கள் இன்று அலோசியஸ் முதலாளியின் சாராயத்தை பிரிக்க ஆரம்பித்துள்ளனர். 

பார்க்கும் போது விநியோகிப்பதும் இவர்கள் தான், அலோசியஸிடம் பணம் பெற்ற ஒரு பகுதியினர் பற்றிய தகவல்களே வெளியாகியுள்ளன.

 தற்போதைய அரசாங்கம் வங்களை கொள்ளையிட்டது போன்று மேலும் நாட்டில் பல கொள்ளைகள் இடம்பெற்றுள்ளன.

எனக்கு அலோசியஸ் 800 முறை தொலைபேசி அழைப்பு கொடுத்திருந்தால், என்னிடம் வழங்கப்பட்ட பணம் இருந்தால் அவற்றை கண்டுபிடித்து என்னை சிறையில் அடையுங்கள். 

ஆனால், பணத்தை பெற்றவர்களையும் சிறையில் அடையுங்கள். அப்போது நாங்கள் அனைவரும் ஒன்றாக சிறையில் இருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்னை சிறையில் அடையுங்கள் - நாமல் ராஜபக்ஷ என்னை சிறையில் அடையுங்கள் - நாமல் ராஜபக்ஷ Reviewed by Vanni Express News on 6/26/2018 01:24:00 AM Rating: 5