நுரைச்சோலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அனல்மின் நிலையத்தை இயங்கவிடமாட்டோம் - நியாஸ்

-ஊடகவியலாளர் சப்ராஸ் 

கல்பிட்டி பிரதேசத்தில் தொடர்சியாக மின்சாரம் தடைப்படுவதால் அண்மையில் நுரைச்சோலை நரக்களி பகுதியில் பாரிய போராட்டம் ஒன்றை கிராமமக்கள் முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ்.

நாங்கள் போராட்டம் நடத்திய இடத்தில் உடனடியாக மின்சாரத்தை வழங்கினார்கள் ஆனால் கல்பிட்டி உட்பட பல பிரதேசங்களில் மின்சாரம் வழங்கப்படவில்லை இப்படியானதொரு பழிவாங்கல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்த பழிவாங்கல் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒரு அழுத்தத்தை இங்குள்ள அதிகாரிகளுக்கு சொல்லிவைக்க விரும்புகிறேன்.

தொடர்சியாக கல்பிட்டி பிரதேசத்தில் மின்சாரம் தடைப்படுமாக இருந்தால் இந்த அனல்மின் நிலையத்தை இயங்க விடாமல் தடுப்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னேடுப்பதுக்கு மக்கள் தீர்மானித்து உள்ளார்கள் என்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் அவர்கள் கூறினார்.

கடந்த வாரம் பாலாவி கரம்பை பகுதியில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவர், தாக்கப்பட்டமையை அடுத்து பாலாவி முதல் கற்பிட்டி வரையிலான பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நுரைச்சோலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அனல்மின் நிலையத்தை இயங்கவிடமாட்டோம் - நியாஸ் நுரைச்சோலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அனல்மின் நிலையத்தை இயங்கவிடமாட்டோம் - நியாஸ் Reviewed by Vanni Express News on 6/11/2018 01:07:00 AM Rating: 5