சாதாரண தர பரீட்சைக்கு சுகாதார பாடத்தினை கட்டாய பாடமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு சுகாதார பாடம் கட்டாயமாகிறதுசுகாதார பாடத்தினை க.பொ.த. சாதாரண தர பரீட்சை விடய பரப்பில் கட்டாய பாடமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

2023ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பாடத்திட்ட சீர்த்திருத்தின் போது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கல்வி மறுசீரமைப்புக்கான அறிஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளையும், தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபார்களையும் உள்ளடக்கி குறித்த யோசனையை செயற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சுகாதார நோய்கள் வயது வேறுபாடின்றி பலரையும் பீடித்து கொண்டிருக்கின்றன. சுகாதாரம் தொடர்பான சரியான அறிவின்மையே இதற்கான மிக முக்கிய காரணமாகும். 

அதன்படி சுகாதாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் அறிவுறுத்துவது அத்தியவசிய ஒன்றாக மாறியுள்ளதால் சுகாதார பாடத்தினை கட்டாய பாடமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தர பரீட்சைக்கு சுகாதார பாடத்தினை கட்டாய பாடமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது சாதாரண தர பரீட்சைக்கு சுகாதார பாடத்தினை கட்டாய பாடமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது Reviewed by Vanni Express News on 6/06/2018 05:34:00 PM Rating: 5