விரைவில் தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் அது ஜனநாயகத்தின் இறுதிப் பயணமாக அமையும்

அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படவில்லை என்றால், அது ஜனநாயகத்தின் இறுதிப் பயணமாக அமையும் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். 

அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டணியை ஏற்படுத்தி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த உள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார். 

இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

நாடு தற்போது சிக்கல் நிறைந்ததாக மாறியுள்ளதாகவும் இந்நிலை தொடர்ந்தால் மக்கள் மேலும் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நிலை வரும் என்பதால், இந்நிலையை தொடர இடமளிக்க முடியாது எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
விரைவில் தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் அது ஜனநாயகத்தின் இறுதிப் பயணமாக அமையும் விரைவில் தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் அது ஜனநாயகத்தின் இறுதிப் பயணமாக அமையும் Reviewed by Vanni Express News on 6/11/2018 11:43:00 PM Rating: 5