நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்ப் பிரச்சாரம்

நாட்டினுள் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்ப் பிரச்சாரம் பரப்பப்பட்டுள்ளதென்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.

அவ்வாறு தட்டுப்பாடு இல்லை என்றும் மக்கள் வீணாக குழப்பமடைய தேவையில்லை என்றும் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர கூறியுள்ளார்.

பெற்றோல் விநியோகம் செய்கின்ற தனியார் பவுசர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பெற்றோல் விநியோகத்தில் தடை ஏற்படலாம் என்று பொய்ப் பிரச்சாரம் பரவிக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்கின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர கூறியுள்ளார்.
நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்ப் பிரச்சாரம் நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்ப் பிரச்சாரம் Reviewed by Vanni Express News on 6/30/2018 11:52:00 PM Rating: 5