முசலியில் பிறைக் குழு அமைக்கப்படும் - கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்

முசலியின் சகல கிராமங்களையும் ஒன்றிணைத்து பிறைக்குழு அமைக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

குறித்த குழு பிறை காணப்பட்டதென்று தீர்மானித்தால் அது பகிரங்கப்படுத்தப்படும். இன்ஷா அல்லாஹ். 

நோன்புப் பெருநாளின் போது முசலியில் பிறை காணப்பட்ட விடயத்தில்  முசலி உலமா சபையின் எந்தவொரு பங்களிப்பையும் காணவில்லை. தொடர்ந்தும் பதவி மோகத்தில் முசலி உலமா சபை இயங்குவதில் பயனில்லை.

ஒருசில நபர்களோ ஒரு பள்ளிவாசலோ பிறை காணப்பட்ட விடயத்தை வெளியிடுகின்ற போது எதிர்கொள்கின்ற சவால்களைக் கருத்திற் கொண்டு 'முசலி பிறைக் குழு' அமைக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

இக்குழு முசலிப் பிரதேசத்திலுள்ள சகல பள்ளிவாசல்கள், உலமாக்கள் மற்றும் முக்கியஸ்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி உருவாக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

கடந்த நோன்புப் பெருநாளின் போது சில முஸ்லிம்கள் பிறை கண்டதை ஏற்றுக் கொண்ட நாம் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதைத் தவிர்த்து உலமா சபையின் முடிவின்படி சனிக்கிழமை பெருநாள் கொண்டாடினோம். எனினும் இந்நிலை திருப்திகரமானதாக இல்லை.

இனிமேல் பிறை விடயத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இன்ஷா அல்லாஹ்.


முகுசீன் றயீசுத்தீன்
உப தவிசாளர்
முசலி பிரதேச சபை
முசலியில் பிறைக் குழு அமைக்கப்படும் - கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் முசலியில் பிறைக் குழு அமைக்கப்படும் - கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் Reviewed by Vanni Express News on 6/19/2018 11:38:00 PM Rating: 5