நாடு திரும்பிய பொலிஸ் மா அதிபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸாரை நலம் விசாரிக்க சென்றார்


மாத்தறை நகை கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பொலிஸ் மா அதிபர் நேற்று (26) நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக அமெரிக்கா சென்ற பொலிஸ் மா அதிபர்  நேற்று நாடு திரும்பினார். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரான வசந்த புஷ்பகுமார, பொலிஸ் வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 

இதேவேளை, காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தரான சுகதபால, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு திரும்பிய பொலிஸ் மா அதிபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸாரை நலம் விசாரிக்க சென்றார் நாடு திரும்பிய பொலிஸ் மா அதிபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸாரை நலம் விசாரிக்க சென்றார் Reviewed by Vanni Express News on 6/27/2018 02:04:00 AM Rating: 5