பணிக்கு திரும்பாத தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

இன்னும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன கூறியுள்ளார்.

சேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்றும், பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஜூன் மாதம் 01ம் திகதி முதல் 11ம் திகதி வரையான நாட்களுக்கு மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரச தகவல் திணைக்களம் இது தொடர்பான ஊடக அறிக்கையை வௌியிட்டுள்ளது.
பணிக்கு திரும்பாத தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை பணிக்கு திரும்பாத தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை Reviewed by Vanni Express News on 6/21/2018 11:02:00 PM Rating: 5