வன்னியில் காணி பிரச்சினை - ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட தீர்மானம்

வன்னியில் நிலவுகின்ற காணி பிரச்சினைகள் தொடர்பில், இந்தமாத இறுதிக்குள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இந்த திர்மானத்தை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாற்றுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு ஒன்றையும் நியமித்துள்ளது.

இந்த அறிக்கை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியை சந்திக்கும் போது, அவரிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வன்னியில் காணி பிரச்சினை - ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட தீர்மானம் வன்னியில் காணி பிரச்சினை - ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட தீர்மானம் Reviewed by Vanni Express News on 6/20/2018 10:55:00 PM Rating: 5