ஐவர் கொண்ட குழுவுடன் பிரதமர் ரணில் கட்டார் பயணம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு சுற்றுலா ஒன்றிற்காக கட்டார் இராஜ்ஜியத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டார் விமான சேவையின் QR 669 என்ற விமானத்தில் அவர் கட்டார் இராஜ்ஜியம் நோக்கி பயணித்தாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

பிரதமருடன் மேலும் 5 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டியிடம் விசாரித்த போது பிரதமர் தனிப்பட்ட சுற்றுலா ஒன்றிற்காக கட்டார் இராஜ்ஜியம் நோக்கி பயணித்தாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐவர் கொண்ட குழுவுடன் பிரதமர் ரணில் கட்டார் பயணம் ஐவர் கொண்ட குழுவுடன் பிரதமர் ரணில் கட்டார் பயணம் Reviewed by Vanni Express News on 6/10/2018 05:22:00 PM Rating: 5