புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது - பிரதமர் ரணில்

நாட்டிற்கு குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்துவதற்காக புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரகம – மில்லனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உற்பத்தி துறை நவீனமயமாகியுள்ளது.
இது 1977ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திறந்த பொருளாதார கொள்கையின் அடிப்படையில் சாத்தியப்பட்டுள்ளது.

பலர் திறந்த பொருளாதார கொள்கைக்கு அஞ்சினர்.

எனினும் தற்போது இலங்கையின் உற்பத்திகள் சர்வதேச உற்பத்திகளுடன் போட்டியிடும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளன.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம்குறித்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் இலங்கைக்கு தரம் அற்ற விலைகுறைந்த பொருட்களை இறக்குமதி செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தொழில்துறையை பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது - பிரதமர் ரணில் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது - பிரதமர் ரணில் Reviewed by Vanni Express News on 6/22/2018 10:28:00 PM Rating: 5