புத்தளம் நுரைச்சோலை மின்சாரசபைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு

-வன்னி எக்ஸ்பிரஸ் நியூஸ் செய்தியாளர்

நுரைச்சோலை மின்சாரசபை ழியர்கள் கரம்பை பகுதியில் வைத்து  தாக்கப்பட்டதால் பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.  அவர்கள் பயணித்த வாகனமும் தாக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

நேற்று (2018/06/03)  இரவு புத்தளம் நுரைச்சோலை பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள்  வீதியை மறித்து வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பட்டம் ஒன்றை இன்று 2018/06/4 காலை 6 மணிமுதல் பகல் 12 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தை அடுத்து குழியாபிட்டி மின்சாரசபை ழியர்களால் மின்சாரம் வழங்கப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கு அதிகமானோர் கலந்துகொண்டனர்.

மின்சாரசபை ழியர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இந்த நேரத்தில் கரம்பை பகுதியில் வைத்து தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்சாரசபை ழியர்களை தாக்கியதை கண்டித்து  நுரைச்சோலை  மின்சாரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் இடமாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை அடுத்து அங்கு பதற்ற நிலை வரலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மின்சாரம் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் துண்டிக்கப்பட்டு வந்தது.
புத்தளம் நுரைச்சோலை மின்சாரசபைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு புத்தளம் நுரைச்சோலை மின்சாரசபைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு Reviewed by Vanni Express News on 6/05/2018 12:54:00 AM Rating: 5