துவேசம் நிறைந்து ஒழுக்கமற்று அநியாயத்தின் உறைவிடமாக விளங்கும் புத்தளம் தள வைத்தியசாலை

-அ(z)ஸ்ஹான் ஹனீபா

புத்தளம் தள வைத்தியசாலை அனைத்து இன மக்களுக்கும் வர்க்க வேறுபாடின்றி இலவசமாக சிகிச்சை வழங்குவதற்காக உருவாக்கப்படதாகும். 

இதில் பௌத்த மதத்தை சார்ந்தவர்களே அதிகவளவான தாதியர் எண்ணிக்கையைக் கொண்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 

இவ்வைத்தியசாலைக்கு மருந்தெடுப்பதற்காக அதிகம் முஸ்லிம்கள் வருவது வழக்கம், பெரும்பான்மையினத்தவர்களான தாதிமார்கள் முஸ்லிம் நோயாளிகளை ஏறெடுத்தும் பார்க்காது, சிங்கள நோயாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், இரு தாதிகள் நின்று அரட்டை அடிப்பதும், Smart போனை குடைந்து கொண்டிருப்பதுமாக நேரத்தை வேண்டுமென்றே வீணாக்கிவிட்டு முஸ்லிம் நோயாளிகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இறுதியில் அவர்கள் வேதனையுடனும் சோகத்துடனும் திரும்பச் சென்ற சம்பவங்கள் ஏராளமுண்டு.

நேற்று முன்தினம் புத்தளத்தின் ஓர் முக்கிய ஆலிமின் மகனுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட, உடனே இவ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், மாலை நேரத்தில் குறித்த மகனின் வலி அதிகரிக்க அங்கு ward இல் அவ்வேளையில் கடமையில் இருந்த பெண் வைத்தியைக்கு எவ்வளவோ எடுத்து சொல்லி சற்று வந்து பாருங்கள் என்று வினவிய போதும் அவள் வந்து பார்க்கிறேன் என்று சொல்லி சொல்லியே வேறு ஆண் வைத்தியருடன் கதைத்துக் கொண்டிருந்தார், நாம் அங்கிருந்த வரை அவ்வைத்தியை நோயாளியை வந்து பார்க்கவில்லை. 

இதனை விட மிகவும் வலியையும் கோபத்தையும் ஏற்படுத்திய விடயம் யாதெனில் “அனுமதிக்கப்பட்ட மேற்குறித்த நோயாளியின் கட்டிலுக்கு அடுத்த கட்டில் ஓர் பௌத்த பிக்குவினுடையதாக இருந்தது, நோயாளிகளை பார்க்க வரும் சொந்த பந்தங்கள் நோயாளிகளது கட்டிலை சூழ நின்றுகொண்டு சுகம் விசாரிப்பது வழக்கம், விடயம் இவ்வாறிருக்கையில் அருகிலுள்ள கட்டிலிலிருந்த பௌத்த பிக்குவையும் காண்பதற்கு அவரது சொந்தங்களும் வந்திருந்தனர் இவ்வேளையில் அங்கு வந்த துவேசம் தலைக்கேறிய தாதிகளது Supervisor ஒருவன் “அபகே ஹாமதுருவ நே” என்று எங்களது பௌத்த பிக்கு யாரும் அவர் கட்டிலுக்கருகில் செல்ல வேண்டாமென அனைவருக்கும் வீணாக ஏசி அவரை சூழ திறந்திருந்த திறைகளை உடனே மூடினான். உடனே எல்லோரின் முகத்திலும் கோபத்தின் அடையாளம் தென்பட்டது இருந்தும் நோன்போடு இவனுடன் எதற்கு சண்டையென பொறுமையுடன் திரும்பி வந்துவிட்டோம்.

மக்களோடு மக்களாக பௌத்த பிக்குவை கவனிக்க முடியாதெனில் அவரை விசேட அறையில் அல்லது தனிப்பட்ட கட்டிடத்தில் வைத்து கவனிப்பது தான் இவர்கள் கையாள வேண்டிய முதல் அம்சமாகும். 

அத்தோடு ward இல் அனுமதிக்கப்படும் ஆண், பெண் நோயாளிகளுடன் தாதிகள் கடிந்து விழுவதும் காரசாரமாக ஏசுவதும் மனதை புண்படுத்துவமாக செயற்படுகின்றனர், தாதிகள் எப்பொழுதும் நோயாளியை மனம் நோகாது அவர்களது உளவியலை விளங்கி சிறப்பாக கவனிக்கவே ஈடுபடுத்தப்பட்டிருக்கும் பொழுது தலைகீழாக அரக்க குணத்துடன் பழகுவது பொருத்தமற்றதாகும். ஏனெனில் இத்தகைய மோசமான நடத்தைகள் நோயாளிகளது நோய்களை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பது நிச்சயமாகும்.

இவை அனைத்துக்கும் மேலாக வேதனையிலும் பெரும் வேதனை “மகப்பேற்றுக்காக ward இல் அனுமதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்களும் அநியாயத்திற்கு மேல் அநியாயம் இழைக்கப்படுகின்றனர்” மிக முக்கியமாக கர்ப்பிணித் தாய்களுக்கு போதிய கட்டில் இல்லாமையால் ஒருவருக்குக் கூட இட வசதி போதாத கட்டிலில் இரண்டு மூன்று தாய்களை படுக்குமாறு கட்டாயப்படுத்துவது மாத்திரமன்றி சிலரை நிற்க வைத்து கட்டில் கொடுக்காது அநியாயமும் செய்கின்றனர், அத்தோடு தாய்மார்கள் என்று கூட பாராது  ஈவிரக்கமின்றி தாதியர்கள் கடுமையாக ஏசியும் வருவது நிஜம் கூறும் செய்திகாளும்.

இவ்வைத்தியசாலையில் நடைபெறும் அநியாயங்களுக்கு அளவேயில்லை அந்தளவுக்கு அநியாயத்தின் தலைமையாக செயற்படுகிறது. இங்கு வரும் நோயாளிகள் ஏழைகள் ஆதலால் தான் இலவச மருந்திற்காக வருகின்றனர், இவ்வாறு வரும் நோயாளிகளை வைத்தியர்களுகளோ தாதியர்களோ சோம்பேறித்தனத்தின் காரணமாகவும் முன்னாலுள்ள Balasooriya private வைத்தியசாலையில் தங்களுக்கு மேலதிக கொடுப்பணவுகள் கிடைப்பதாலும், சரியாக சிரமம் எடுத்து பரீட்சிக்காது Balasooriya தனியார் வைத்தியசாலைக்குச் சென்று checkup அல்லது scan செய்துவிட்டு வரும்படி கூறுவதை வழக்கமாக ஆக்கியுள்ளனர், ஏனெனில் இங்குள்ள வைத்தியர்களே Balsooriya விலும் பணிபுரவது யாவரும் அறிந்த உண்மை. காசு பணமில்லாத ஏழைகளையும் தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பினால் மக்களுக்கு இலவசமாக சேவை செய்யவென கட்டப்பட்ட புத்தளம் வைத்தியசாலையின் பெறுமதி என்ன?!

இவ்வைத்தியசாலை அப்பகுதியிலுள்ள நாய்களது உறைவிடமாக மாறியுள்ளது, அவை வைத்தியசாலைக்குள் நடமாடுவதும், ward இல் இருக்கும் கட்டில்களுக்குக் கீழ் உறங்கிக் கொள்வதுமாக செயற்படுகின்றன. நோயாளிகள் வந்து போகும் இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பது வைத்தியசாலையின் கடமையாகும், ஆனால் சுத்தம் எனும் பதம் அகராதியில் இல்லாதளவு இவ்வைத்தியசாலை விளங்குகிறது என்பது விசித்திரமாகும்.

Ward இல் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் இந்நாய்களது தொல்லைகளால் தமது உணவுகளை தம்முடன் கட்டிலுக்கு மேல் வைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பபடுள்ளனர். இங்கு இவ்வாறு நாய்கள் நடமாடுவதை ஊழியர்கள் கண்டும் ஏனோதானோ என்று அலட்சியமாக இருப்பதோடு அவற்றிற்கு இடம் கொடுத்து மென்மேலும் நோய்கள் அதிகரிக்க வழிவகுக்கின்றனர். 

இவையனைத்தையும் உரிய மேல் பொறுப்பதிகாரிகள் ஆராய்ந்து விசாரித்து முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு சரியான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து மாற்றத்திற்கு வழிவகுத்து நோயாளிகள் மனம் விரும்பி வந்து மருந்து/ சிகிச்சை பெற்றுச் செல்லும் ஓரிடமாக இவ்வத்தியசாலையை அமைக்க வேண்டுமென வினயமாக வேண்டுகிறேன். 

குறிப்பு: சிங்கள மொழியில் தேர்ச்சியுள்ளவர்கள் இவ்வாக்கத்தை சிங்களத்தில் மொழிபெயர்த்து அதிகம் பகிர்ந்து அநியாயத்திற்கு முற்றுப்புள்ளியிட்டு விடிவுக்கு வித்திடுமாறு பணிவாக வேண்டுகிறேன். 
துவேசம் நிறைந்து ஒழுக்கமற்று அநியாயத்தின் உறைவிடமாக விளங்கும் புத்தளம் தள வைத்தியசாலை துவேசம் நிறைந்து ஒழுக்கமற்று அநியாயத்தின் உறைவிடமாக விளங்கும் புத்தளம் தள வைத்தியசாலை Reviewed by Vanni Express News on 6/07/2018 02:21:00 PM Rating: 5