இனவாதம் என்பது உடல் முழுவதும் பரவும் ஒரு நோய் - அமைச்சர் ராஜித

இனங்களுக்கு இடையில் வேற்றுமையை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வது நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். 

நேற்று (26) களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இனவாதம் என்பது உடல் முழுவதும் பரவும் ஒரு நோய் என அல்பிரட் ஐன்ஸ்டைன் தெரிவித்துள்ளாதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

இனவாதம் அல்லது மதவாதம் உள்ள எந்தவொரு நாடும் இதுவரை வளர்ச்சியடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
இனவாதம் என்பது உடல் முழுவதும் பரவும் ஒரு நோய் - அமைச்சர் ராஜித இனவாதம் என்பது உடல் முழுவதும் பரவும் ஒரு நோய் - அமைச்சர் ராஜித Reviewed by Vanni Express News on 6/27/2018 10:21:00 PM Rating: 5