கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்

-ஊடகப்பிரிவு

‘கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்’ கப்பல் கண்காட்சி தொடர்பான அங்குரார்ப்பண விழாவில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு! 

கப்பல் கட்டுமானப் பணிகள் மற்றும் கப்பல் துறைசார் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றில்உலகளாவிய ரீதியில் ஒப்பிடும்போது, இலங்கை குறைந்தளவிலான விகிதாசாரத்தில் ஈடுபடுகின்ற போதும், இந்தத் துறையில் இலங்கையின் ஏற்றுமதியானது தொடர்ச்சியாக வலுவான எண்ணிக்கையிலேயே இருப்பதாகவும், அதன் விளைவாக 2022 ஆம் ஆண்டில் படகு மட்டும் கப்பல் துறைசார் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 200 மில்லியன் டொலரை ஈட்டக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் காலியில் இடம்பெறும் கப்பல் மட்டும் படகுகளின் கண்காட்சி தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு, கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இடம் பெற்றபோ தேஅமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தநிகழ்வில்சர்வதேச ஏற்றுமதிமற்றும்மூலோபாய அமைச்சர் மலிக்ச மரவிக்கிரம, உல்லாச பயணத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஏற்றுமதிஅபிவிருத்திச்சபையின்தலைவர்இந்திராமல்வத்த, படகுக்கட்டுமான தொழில்நுட்ப விருத்திநிலையத்தின் தலைவர் நீல்பெர்னாண்டோ ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் ரிஷாட்இங்கு மேலும்கூறியதாவது,

“உலகின்பொருளாதாரநெருக்கடிமற்றும்அழுத்தங்களினால்உலகளாவியரீதியிலானகப்பல்மற்றும்படகுகட்டுமானதொழிற்துறைசரிவடைந்துவருகின்றது. எனினும், இலங்கைப் படகுக் கட்டுமான உற்பத்தியாளர்கள் மற்றும் கப்பல்துறை சார்ந்த ஏற்றுமதியாளர்கள் காட்டும் அக்கறையினால், நமது ஏற்றுமதி வருமானம் அதிகரித்து வருவதுடன், நெகிழ்வுப் போக்கையே காட்டி வருகின்றன.

முதன்முறையாக காலியில் இடம்பெறவுள்ள கப்பல் மற்றும் கடல்சார் பொருள் கண்காட்சி, நாட்டின் கடல் வழியான உல்லாசபயணத்துறையை விருத்தி செய்வதற்கும், படகுமற்றும்தோணிகள் கட்டுமானப் பணிகளை மேம்படுத்தி இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் உதவுமென நம்புகின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கான மூலோபாயத்தை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, ஜெனீவாவில் இயங்கும் சர்வதேச வர்த்தக அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்டு வருவதை இங்கு நான் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.

கடந்தஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் படகு தொழிற்சாலைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தேவைகளை முன்னேற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

படகு மட்டும் கப்பல் துறை ஏற்றுமதி வருமானத்தில் இலங்கையின் வளர்ச்சியானது படிப்படியான அதிகரிப்பையே காட்டுகின்றது.2016 ஆம் ஆண்டு 65 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தைக் கொண்ட இலங்கை, 2017ஆம் ஆண்டு97மில்லியன் டொலரை ஈட்டிய துடன்50% சதவிகித அதிகரிப்பைப் பெற்றுக்கொண்டது.

அத்துடன் பல்வேறு இலங்கை கம்பனிகள், கப்பல் மற்றும் படகு தயாரிப்புக்களில் ஈடுபடுவதுடன், 11அடையாளப்படுத்தப்பட்ட கம்பனிகள் ஏற்றுமதியிலும் ஈடுபடுகின்றன. இந்தத் துறையில் ஈடுபாடு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் கம்பனிகளுக்கு நன்றி கூறுவதோடு, தொடர்ந்தும் இந்தத் துறையை விருத்தி செய்ய உதவுமாறும் வேண்டுகின்றேன்”என்றார்.
கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர் கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர் Reviewed by Vanni Express News on 6/22/2018 03:13:00 PM Rating: 5