தினேஷ் எம்.பியின் கேள்விக்கு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதில்

-ஊடகப்பிரிவு

உள்ளூர் கைத்தொழில் துறையை நலிவடைய ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் தினேஷ் எம்.பியின் கேள்விக்கு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதில்!

உள்ளூர் கைத்தொழில் உற்பத்தி துறையினை எந்த வகையிலும் அரசாங்கம் நலிவடையச் செய்யவில்லை என்றும் கைத்தொழில் தொடர்பாக பிழையான கொள்கையினை அரசு நடைமுறைப்படுத்துகின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், இத்துறையினை தரம்மிக்க, உறுதியான பொருளாதார துறையாக மாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம் என்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27(2)இலக்கத்திற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பியிருந்த கேள்வி ஒன்றுக்கு, இன்று காலை(22) பதிலளிக்கும் போதே அமைச்சர் ரிஷாட் இவ்வாறு தெரிவித்தார்.

2006 இல. 10 உள்நாட்டு இறைவரி திணைக்கள சட்டத்தின் பிரகாரம் அனுமதிக்கப்பட்டுள்ள கைத்தொழில் சம்பந்தமான வரிச்சலுகைகள் எதுவும் 2017 இல. 24 உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் மூலம் அகற்றப்படவில்லை.

அத்துடன்,பெறுமதி சேர்க்கப்பட்ட வரியின் மூலம் புதிதாக உள்ளுர் கைத்தொழிலினை பாதிக்கும் வகையில் அமுல்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும் புதிய பெறுமதி சேர்க்கப்பட்ட வரி இறக்குமதி செய்யப்படும் முடிவுறுத்தப்பட்ட பொருள்கள் சிலவற்றுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, உள்ளுர் கைத்தொழிலினை பாதுகாப்பதற்காக துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி (PAL) கைத்தொழில் சார்ந்த இயந்திரங்கள் முற்றுமுழுதாக நீக்கப்பட்டுள்ளது என்பதை கூறுவதில் நான் சந்தோஷம் அடைகின்றேன். மற்றும் அதியுயர் தொழில்நுட்ப இயந்திர சாதனங்களின் இறக்குமதியின் போது, உள்ளூர் கைத்தொழில்களுக்காக துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி (PAL) 75% விலக்களிக்கப்பட்டது.

மேற்கூறியவற்றிற்கு மேலதிகமாக எனது கைத்தொழில், வர்த்தக அமைச்சு பின்வரும் நடவடிக்கைகளை உள்ளூர் கைத்தொழில்களை பாதுபாப்பதற்காக நடவடிக்கைகளை அமுல்படுத்தி வருகின்றது என்பதை இந்த மேலான சபைக்கு அறியத் தருகின்றேன்.

ஜனாதிபதி,பிரதம மந்திரி ஆகியோரின் வழிகாட்டல்களில் கைத்தொழில் மயமாக்கல் ஆணைக்குழு ((Industrialization Commission) 1990ம் ஆண்டு 46ம் இல. கைத்தொழில் மயமாக்கல்ஊக்குவிப்பு சட்டத்திற்கு அமைவாக மீள செயற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் தவிசாளராக நிதி அமைச்சு செயலாளரும், உறுப்பினர்களாக முக்கிய அமைச்சின் செயலாளர்களும் கைத்தொழில் ஆலோசனை சபையின் தலைவர்களும் அங்கம்வகிப்பதுடன், உள்ளுர் கைத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை அணுகி தீர்வுகண்டு வருகின்றனர் என்பதனை மிகவும் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்.

தற்போது எனது அமைச்சு மட்டத்தில் கைத்தொழிற்துறைசார்ந்த 17ஆலோசனை குழுக்கள் இயங்கிவருகின்றன. இந்த குழுக்களின் சில தவிசாளர்கள் கைத்தொழில் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களாக இருக்கின்றனர். இதன் மூலம் இலகுவான கலந்துரையாடலுக்கும், கைத்தொழில் கொள்கை உருவாக்கத்தில் உதவுவதற்கும் உள்ளூர் கைத்தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது என்பது உறுதியாகின்றது.

தற்பொழுது 29 கைத்தொழில் பேட்டைகள் நாடளாவிய ரீதியில் இயங்கிவருவதுடன், இவற்றில் 330 கைத்தொழில்களும் இதனூடாக அண்ணளவாக 20,000 தொழில்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக 5 கைத்தொழில் பேட்டைகள் (வெலிஓயா, மாந்தை, மட்டக்களப்பு, திருகோணமலை, மில்லேனிய,(ஹொரண)) போன்ற இடங்களில் உருவாக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் 120 முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து வருகின்றோம்.

இது மாத்திரமின்றி ஜனாதிபதிதலைமைத்தாங்கும் “தேசிய பொருளாதார சபையில்” உள்ளூர் கைத்தொழில் பிரச்சினைகளை உயர்மட்டத்தில் சமர்ப்பிப்பதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகள் ஏற்றுமதி சபையின், ஏற்றுமதியாளர்களின்அமைப்பினூடாகதீர்வு காணப்படுகின்றது.

கைத்தொழில், வர்த்தகஅமைச்சு சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கான தேசிய கொள்கையினை வகுத்துள்ளதுடன், விரைவில் அதனை நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கான குறைந்த வட்டியிலான SMILE 3, E Friend Lone திட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும்,பாரம்பரிய கைவினை கைத்தறி துறைகளை ஊக்குவிக்க உற்பத்தி கிராமங்கள் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.அத்துடன்செரா (Center of Excellence for Robotic Application)என்ற திட்டம் முதல் கட்டமாக ஆடை உற்பத்தி இலகு பொறியியல் துறையிலும் அமுல்படுத்தப்படவுள்ளது.

மற்றும் உறுதியான தேசிய கொள்கையொன்றினை வகுத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

இன்றுபண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும் “எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்காசெயற்திட்டம்”நமது நாட்டில் தொழில் முயற்சியாண்மையாளர்களுக்குகிடைக்கின்ற ஒரு வரப்பிரசாதமாகும்என்று அமைச்சர் தெரிவித்தார்.
தினேஷ் எம்.பியின் கேள்விக்கு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதில் தினேஷ் எம்.பியின் கேள்விக்கு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதில் Reviewed by Vanni Express News on 6/22/2018 05:04:00 PM Rating: 5