இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம்

-ஊடகப்பிரிவு

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான, இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக,நியமிக்கப்பட்ட ரியாஸ் சாலி நேற்று(25)தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால், இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரான ரியாஸ் சாலிக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹுசைன் பைலா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்னஉட்பட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம் இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவராக ரியாஸ் சாலி நியமனம் Reviewed by Vanni Express News on 6/26/2018 04:52:00 PM Rating: 5