நாளைய தினம் நீங்கள் கொழும்பிற்கு செல்ல இருப்பவரா ? முக்கிய அறிவிப்பு

நாளைய தினம் வௌ்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான மெரைன் டிரைவ் வீதி போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். 

அதன்படி நாளை (24) காலை 07.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணிவரை இந்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018ம் ஆண்டு தேசிய சைக்கிள் ஓட்டப் போட்டி இடம்பெறவுள்ளதாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக நாளை குறித்த காலப்பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாளைய தினம் நீங்கள் கொழும்பிற்கு செல்ல இருப்பவரா ? முக்கிய அறிவிப்பு நாளைய தினம் நீங்கள் கொழும்பிற்கு செல்ல இருப்பவரா ? முக்கிய அறிவிப்பு Reviewed by Vanni Express News on 6/23/2018 11:21:00 PM Rating: 5