பாடசாலை அருகில் நின்றுகொண்டிருந்த மாணவன் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் பலி

அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் 14 வயதுடைய மாணவன் ஒருவன் மீது தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார். 

அலவல மகா வித்தியாலயத்தில் 09ம் தரத்தில் கல்வி பயிலும் துலான் செனிது என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று (05) இடம்பெற்றுள்ளது. 

குறித்த மாணவன் பாடசாலையில் நடந்த மேலதிக வகுப்பு நிறைவடைந்ததன் பின்னர், சகோதரனையும் அழைத்துக் கொண்டு வீடு செல்வதற்காக பாடசாலைக்கு அருகில் நின்றுகொண்டிருக்கும் போது அருகில் இருந்த தென்னை மரம் முறிந்து மாணவன் மீது விழுந்துள்ளது. 

இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்படும் போது மாணவன் உயிரிழந்து விட்டதாக எமது செய்தியாளர் கூறுகின்றார். 

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
பாடசாலை அருகில் நின்றுகொண்டிருந்த மாணவன் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் பலி பாடசாலை அருகில் நின்றுகொண்டிருந்த மாணவன் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் பலி Reviewed by Vanni Express News on 6/06/2018 03:06:00 PM Rating: 5