மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த யுவதி சடலமாக மீட்பு

மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த யுவதியின் சடலம் இன்று (21) கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவரே இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

வரதென்ன பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த சவுதி அரேபிய பிரஜைகள் 7 பேர் பயணித்த படகு கவிழ்ந்து நேற்று விபத்து ஏற்பட்டது.

7 பேரில் 6 நபர்கள் நேற்றைய தினம் காப்பற்றப்பட்டதுடன், குறித்த யுவதி நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

மகாவலி ஆற்றில் - சவுதி அரேபியா நாட்டை சேர்ந்தவர்கள் பயணித்த படகு கவிழ்ந்தது - ஒருவரை காணவில்லை

முழுமையாக செய்தியை வாசிக்க ---> http://www.vanniexpressnews.com/2018/06/mis_20.html
மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த யுவதி சடலமாக மீட்பு மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த யுவதி சடலமாக மீட்பு Reviewed by Vanni Express News on 6/21/2018 04:20:00 PM Rating: 5