துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு - ஒருவர் கைது

மாத்தறை நகரத்தில் இன்று காலை பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸர் உயிரிழந்துள்ளார். 

கொள்ளையரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இதேவேளை பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் தப்பிச்சென்ற கொள்ளையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

மாத்தறை ஹுனுகொட்டுவ பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சாமர இந்திரஜித் என்பவர் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக அறியப்படுகிறார். 

ஏனைய தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். 

மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.மாத்தறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு - ஒருவர் கைது
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு - ஒருவர் கைது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு - ஒருவர் கைது Reviewed by Vanni Express News on 6/22/2018 02:25:00 PM Rating: 5