குடும்ப பிரச்சினை - தனது மூன்று வயது குழந்தையுடன் கடலில் மூழ்கிய தந்தை

தனது குழந்தையுடன் தற்கொலை செய்ய முயற்சித்த நபரொருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது மூன்று வயதான மகனுடன் கடலில் மூழ்கி தற்கொலை செய்ய முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தனது பிள்ளையுடன் குறித்த நபர் கடலில் மூழகி தற்கொலை செய்ய முயன்ற வேளை அதனை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.

இதன்போது அருகில் இருந்த மீனவர் ஒருவர் அவர்களை காப்பாற்றியுள்ளார்.

பின்னர் குழந்தை சிகிச்சைகளுக்காக மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த நபர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த தற்கொலை முயற்சி இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
குடும்ப பிரச்சினை - தனது மூன்று வயது குழந்தையுடன் கடலில் மூழ்கிய தந்தை குடும்ப பிரச்சினை - தனது மூன்று வயது குழந்தையுடன் கடலில் மூழ்கிய தந்தை Reviewed by Vanni Express News on 6/24/2018 10:55:00 PM Rating: 5