ரோசம் இல்லாது விட்டாலும், உடலில் கூச்சமாவது இருக்கவேண்டும்...!

-முனைமருதவன்


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தேர்வில் சித்தியடைவதாக இருந்தால் பாலியல் லஞ்சம் கொடுத்துத்தான் சித்தியடைய முடியும் என்று விஜயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் கூறிய விடயத்துக்கு, அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த எந்த பாராளுமன்ற உறுப்பினரும் பதில் கொடுக்கவில்லை. 

அதனால் விஜயதாச ராஜபக்ச கூறியது உண்மை என்ற நிலைக்கு சென்றுவிட்டது. இதன் தாக்கத்தை எவரும் கண்டுகொள்ளாத நிலையில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் எதிர்ப்பு குரல் கொடுத்ததன் காரணமாக அந்தக் கலங்கம் நீக்கப்படுள்ளது.

விஜயதாச ராஜபக்ச அவர்களே நான் அப்படிக்கூறவில்லை என்று மறுத்தது மட்டுமல்ல, பாராளுமன்ற அமர்வின் பிற்பாடு ஹரீஸ் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து அந்த தவறை ஒத்துக்கொண்டு, இனிமேல் நான் கவனமாக நடந்து கொள்கின்றேன் என்று கூறுமளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

இந்த விடயத்தை பாராட்டாமல் இருக்கமுடியாது. முஸ்லிம்களின் தலைவன் என்று பேரெடுத்தவர்களும், அம்பாரை மாவட்டத்தில் நாங்களும் எம்பிகள்தான் என்று கோமாளி வேசம் போடுபவர்களின் மத்தியில் இவர் நடந்து கொண்டது பாராட்டப்டவேண்டிய ஒன்றாகும்.

தேர்தல் மேடைகளில் வாய் கிழிய கத்தும் அண்டங்காக்கைகுக்கு இனிமேலாவது ரோசம் வரவேண்டும்.

ரோசம் இல்லாது விட்டாலும், உடலில் கூச்சமாவது இருக்கவேண்டும்...! ரோசம் இல்லாது விட்டாலும், உடலில் கூச்சமாவது இருக்கவேண்டும்...! Reviewed by Vanni Express News on 6/20/2018 11:21:00 PM Rating: 5