இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தேனீர் கடை முதலாளி பலி

தேனீர் கடை முதலாளியான வயோதிபர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வயோதிபர் உயிரிழந்த சம்பவம் நேற்று (08) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 

மட்டக்களப்பு காத்தான்குடி அலியார் சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்ச்சி தெரிவித்தார். 

காத்தான்குடியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆதம்லெப்பை முகமது ஸ்மையில் என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த பிரதேசத்தில் தேனீர்கடை நடாத்திவந்த வயோதிபர், நோன்பு காலத்தையிட்டு இரவு நேரத்திலும் தேனீர் கடையை திறந்து நடாத்தி வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சனநடமாட்டம் இல்லாத நேரத்தில் கடையில் தனியாக இருந்த போது இவர் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது 

இச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் 
இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தேனீர் கடை முதலாளி பலி இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தேனீர் கடை முதலாளி பலி Reviewed by Vanni Express News on 6/09/2018 04:25:00 PM Rating: 5