சௌதி இளவரசி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சஞ்சிகை

சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் அப்துல்லா அல் சௌத் ஒரு காரில் அமர்ந்திருப்பதுபோல தங்கள் அட்டைப்படத்தில் வெளியிட்டது அரபு உலகில் உள்ள பெண்களின் பிரச்சனையை வெளிப்படுத்தவே என்று ´வோக் அரேபியா´ சஞ்சிகை கூறியுள்ளது. 

பெண்கள் வாகனங்கள் ஓட்ட வரும் ஜூன் 24 முதல் சௌதி அரேபியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், அதற்குப் போராடிய பெண் செயல்பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் படத்தையே அந்த சஞ்சிகை வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது.
சௌதி இளவரசி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சஞ்சிகை சௌதி இளவரசி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சஞ்சிகை Reviewed by Vanni Express News on 6/03/2018 12:43:00 AM Rating: 5