வெள்ளிமலை மன்/பதியுதீன் பாடசாலை மைதான வேளைத்திட்டத்திற்கு நிதி ஒதிக்கீடு

-பதுறுதீன் அக்ரம் 

மன்னார் மாவட்டத்தின் முசலிப்பிரதேச செயலகப்பிரிவின் அமைந்துள்ள வெள்ளிமலை மன்/ பதியுதீன் பாடசாலை விளையாட்டு மைதானத்தின் முதற்கட்ட வேளைத்திட்டமாக செப்பனிடும் பணி இன்று (22) ஆரம்பிக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமாகிய அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மாகாண சபை உறுப்பினரும் ,வெள்ளிமலை பதியுதீன் பாடசாலையின் ஸ்தாபகருமான அலிக்கான் ஷரீப் அவர்களின் மாகாண சபை நிதியினூடாகவே இந்த மைதானத்திற்கான வேளைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.கே றயீசுத்தீன் (அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் தலைமையில் நடைபெற்றதோடு ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளிமலை மன்/பதியுதீன் பாடசாலை மைதான வேளைத்திட்டத்திற்கு நிதி ஒதிக்கீடு வெள்ளிமலை மன்/பதியுதீன் பாடசாலை மைதான வேளைத்திட்டத்திற்கு நிதி ஒதிக்கீடு Reviewed by Vanni Express News on 6/22/2018 04:13:00 PM Rating: 5