இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய தேரர்கள்

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி, வணக்கத்துக்குரிய கோபாவக தம்மிந்த தேரர் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். 

இனந் தெரியாத நபர்களினால் நேற்று (12) இரவு 11 மணியளவில் இந்த துப்பாகிச் சூடு ரஜமகா விகாரை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டில் ரஜமகா விகாரையின் பிரதம குரு உட்பட மற்றுமொரு தேரரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தேரர்கள் இருவரும் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய தேரர்கள் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய தேரர்கள் Reviewed by Vanni Express News on 6/14/2018 01:58:00 AM Rating: 5