பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை

மாத்தறை நகரத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான சாமர இந்திரஜித் என்பவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 

சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த ஆயுதப் பொதியை எடுக்க சென்ற பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை பொலிஸார் சந்தேகநபரான சாமர இந்திரஜித் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாமர இந்திரஜித் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

வெயாங்கொட, மாளிகாதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த சாமர இந்திரஜித் ஜயசுந்தர என்பவரே உயிரிழந்துள்ளார். 

மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை Reviewed by Vanni Express News on 6/23/2018 02:24:00 PM Rating: 5