ஞானசார தேரருக்கு நாளை பிணை வேண்டும் - இல்லாவிட்டால் உண்ணாவிரத போராட்டம்

சிறைவாசம் அனுபவிக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நாளைய தினத்திற்குள் பிணை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனின், சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக பொதுபல சேன அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனு நாளை (22) விசாரணை செய்யப்பட உள்ளதாக, குறித்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார். 

பொதுபல சேன அமைப்பினர் நேற்று (20) கோட்டை ஆலமரத்தடியில் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு நாளை பிணை வேண்டும் - இல்லாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் ஞானசார தேரருக்கு நாளை பிணை வேண்டும் - இல்லாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் Reviewed by Vanni Express News on 6/21/2018 03:06:00 PM Rating: 5