இன்று ஞானசார தேரர் விடுதலை செய்யப்படுவாரா ?

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 

குறித்த மேன்முறையீடு கடந்த 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட இருந்த போதும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் எவரும் நீதிமன்றில் ஆஜராகியிருக்காமையின் காரணத்தால் மேன்முறையீடு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது. 

எவ்வாறாயினும் சிறைவாசம் அனுபவிக்கும் ஞானசார தேரரை இன்று ஹோமாகம் நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்போவதில்லை என சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை ஞானசார தேரருக்கு இன்று பிணை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனின், சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக பொதுபல சேன அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

ஏதாவது ஒரு காரணத்தால் ஞானசார தேரருக்கு இன்று பிணை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனின் இப்போது சத்தியகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக பொதுபல சேன அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று ஞானசார தேரர் விடுதலை செய்யப்படுவாரா ? இன்று ஞானசார தேரர் விடுதலை செய்யப்படுவாரா ? Reviewed by Vanni Express News on 6/22/2018 02:14:00 PM Rating: 5