ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி ஹட்டனில் எதிர்ப்பு பேரணி

-க.கிஷாந்தன்

கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி இன்று மதியம் 3 மணியளவில் ஹட்டனில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.
ட்டன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், ட்டன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குறித்த எதிர்ப்பு ஊர்வலத்தை மேற்கொண்டிருந்தனர்.

ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரை விடுவிக்குமாறு வழியுறுத்தியே இந்த எதிர்ப்பு ஊர்வலம் இன்று 
ட்டனில் இடம்பெற்றது. 

ட்டன் நீக்ரோதாரம விகாரையின் விகாராதிபதிகளில் ஒருவரான ஒமந்தே தீராநந்த தேரரின் ஏற்பாட்டில் பிக்குமார்கள் மற்றும் ட்டன் பிரதேச மக்கள் மலர் தட்டுக்களை ஏந்தியவண்ணம் ட்டன் மல்லியப்பு சந்தியிருந்து ட்டன் நீக்ரோதாரம விகாரைக்கு ஊர்வலமாக வந்து, விகாரையில் பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.
ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி ஹட்டனில் எதிர்ப்பு பேரணி ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி ஹட்டனில் எதிர்ப்பு பேரணி Reviewed by Vanni Express News on 6/21/2018 04:49:00 PM Rating: 5