காலி மாவட்டத்தை தெற்காசியவின் சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றப்படும்

காலி மாவட்டத்தை தெற்காசியவின் சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இதற்காக காலி நகரத்திற்குள் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். 

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காலி நகரின் எல்லையில் உள்ள அங்கீகரிக்கப்படாத மற்றும் பொருத்தமற்ற கட்டுமானங்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் கலந்துரையாடல் காலி தேசிய சமுத்திர நூதனசாலையில் நடைபெற்றது. 

இதில் கருத்த தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தை தெற்காசியவின் சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றப்படும் காலி மாவட்டத்தை தெற்காசியவின் சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றப்படும் Reviewed by Vanni Express News on 6/25/2018 05:42:00 PM Rating: 5