முஸ்லிம் நாடுகள் மீதான ட்ரம்பின் பயணத்தடை அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் தமது நாட்டுக்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தடை விதித்த உத்தரவுக்கு ஆதரவாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிப்பதாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக பல மாகாண நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டதால், ட்ரம்பின் பயணத்தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டது. 

பின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் விலக்கப்பட்டு அந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து அந்நாட்டு அரசு உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்த நிலையில், இந்த தடையை விலக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 2 நீதிபதிகள் மட்டுமே ஜனாதிபதின் உத்தரவை தடை செய்ய அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர். 

உச்ச நீதிமன்றின் இந்த தீர்ப்புக்கு எதிராக பல அமைப்புகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், டிரம்ப்பின் பயணத்தடை உத்தரவு சரியே என்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அந்த நாட்டின் தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், நான்கு நீதிபதிகள் டிரம்பின் அறிவிப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
முஸ்லிம் நாடுகள் மீதான ட்ரம்பின் பயணத்தடை அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி முஸ்லிம் நாடுகள் மீதான ட்ரம்பின் பயணத்தடை அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி Reviewed by Vanni Express News on 6/27/2018 02:28:00 AM Rating: 5