ஜனாதிபதி தேர்தலுக்கான ஐ.தே.கட்சியின் வெற்றி வேட்பாளர் தயார்

2020 ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசிய கட்சி தற்போதே வெற்றி வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார். 

வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறினார். 

கூட்டு எதிர்க்கட்சிக்கு இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

பிரசன்ன ரணதுங்கவின் குழு பசில் ராஜபக்ஷவை நிறுத்துவதற்கும், மஹிந்தானந்த அளுத்கமே, விமல் வீரவன்ச ஆகியோரின் குழு கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கும் முயற்சி செய்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான ஐ.தே.கட்சியின் வெற்றி வேட்பாளர் தயார் ஜனாதிபதி தேர்தலுக்கான ஐ.தே.கட்சியின் வெற்றி வேட்பாளர் தயார் Reviewed by Vanni Express News on 6/30/2018 10:11:00 PM Rating: 5