தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலுக்கான காரணம் கண்டறியப்பட்டது

தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலானது ´இன்புளூவன்ச ஏ´ வகையான வைரஸினால் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தென் மாகாண மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் பரவிவரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சலால் இதுவரை 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவற்றுள் மாத்தறை மாவட்டத்தில் 9 குழந்தைகளும், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலுக்கான காரணம் கண்டறியப்பட்டது தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலுக்கான காரணம் கண்டறியப்பட்டது Reviewed by Vanni Express News on 6/04/2018 11:11:00 PM Rating: 5