நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் எதிர்வரும் சில தினங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக எதிர்வரும் 6 ஆம் திகதி வரை இந்த நிலையை எதிர்பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென் மாகாணத்திலும் மொனராகலை, மாத்தளை, நுவரெலிய மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். 

தற்போது நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

விசேடமாக சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் 75 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை பெய்யக்கூடும். அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் Reviewed by Vanni Express News on 6/04/2018 11:35:00 PM Rating: 5