மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது - கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் இன்று (26) மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடமத்திய மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல், பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 40 - 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில்) ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். 

மேலும், புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது - கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது - கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் Reviewed by Vanni Express News on 6/26/2018 04:37:00 PM Rating: 5