இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை, புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது. 

மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும். 

புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது Reviewed by Vanni Express News on 6/29/2018 03:16:00 PM Rating: 5