நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு

-க.கிஷாந்தன்

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை தோட்டப்பகுதியில் பிரதான வீதியில் மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்துள்ளதனால் ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மண்சரிவு இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மண்மேடும், மரமும் முறிந்து விழுந்துள்ளதனால் இதனை சீர் செய்வதற்கு தலவாக்கலை பொலிஸாரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு Reviewed by Vanni Express News on 6/10/2018 02:40:00 PM Rating: 5